தமிழகத்தில் 10 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

மலர்விழி, தாகீர் உசேன், வீரய்யா பழனிவேல் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.
தமிழகத்தில் 10 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னையில் 5 இடங்கள், புதுக்கோட்டையில் 3 இடங்களில், விழுப்புரம் மற்றும் தருமபுரியில் தலா ஒன்று என மொத்தம் 10 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.
இதில், குறிப்பாக தருமபுரி முன்னாள் ஆட்சியராக இருந்த மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மலர்விழி வீடு உள்பட 10 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மலர்விழி, தாகீர் உசேன், வீரய்யா பழனிவேல் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், வரி வசூல் ரசீது புத்தகங்களை அதிக விலைக்கு வாங்கி ரூ.1.31 கோடி முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறதாக கூறப்படுகிறது. மேலும், தனியார் நிறுவன உரிமையாளர்கள் தாகிர் உசேன், வீரய்யா பழனிவேல் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.