ஆம்ஸ்ட்ராங் படுகொலை…கதறி அழும் பா.ரஞ்சித்!

Pa Ranjith

சென்னை: பகுஜன் சமாஜ்வாடி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  ஆம்ஸ்ட்ராங் நேற்று சென்னை, பெரம்பூர் பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய உடல் சென்னை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து இறுதி அஞ்சலிக்காக கட்சி அலுவலகம் அல்லது வேறு பொது இடத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து, அவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வேதனையுடன் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், சென்னை அரசு மருத்துவமனைக்கு சென்ற இயக்குனர் பா.ரஞ்சித் கண்கலங்கி கதறி அழுதார். ஆம்ஸ்ட்ராங் பா.ரஞ்சித், பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடன் நெருங்கிய நட்பும் அன்பும் கொண்டவர்.  எனவே அவருடைய இறப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் கதறி அழுதுள்ளார்.

மேலும், சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டடு வருகிறார்கள். இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்