#BREAKING: பாஜகவில் இணைந்த மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் ..!

மக்கள் நீதி மய்யத்தின் நிறுவன பொதுச்செயலாளரான அருணாச்சலம் பாஜகவில் இணைந்தார்.
சென்னையில் உள்ள கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் மக்கள் நீதி மய்யத்தின் பொது செயலாளராக இருந்த அருணாச்சலம் பாஜகவில் இணைந்தார்.
பாஜகவில் இணைந்த பின்னர் பேட்டியளித்த அருணாச்சலம், கமலிடம் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளிக்க கேட்டேன் அதற்கு மறுத்தார். விவசாயிகளுக்கு விரோதமான போராட்டத்தில் கலந்து கொண்டார். எதையும் ஏற்கும் மனநிலையில் அவர் இல்லை. வேளாண் திருத்த சட்டத்தை ஆதரிக்க சொல்லியும், கமல் அதனை கண்டுகொள்ளவில்லை.
அதனால், மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வெளியேறி பாஜகவில் தொண்டனாக தன்னை இணைத்து கொண்டேன் என தெரிவித்தார்.