மாஜிஸ்திரேட்டை ஒருமையில் விமர்சனம்.! ஏ.எஸ்.பி, டி.எஸ்.பி ஆஜராக உத்தரவு.!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சார்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிங்ஸ் கடந்த 19-ம் தேதி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு சென்றனர். அப்போது, கோவில்பட்டி சிறையில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இந்த வழக்கை தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை கோவில்பட்டி மாவட்ட நீதிபதி ஹேமா மற்றும் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரித்து வருகின்றனர்.
நேற்று கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை நடத்தினார். இந்நிலையில், நேற்று நடந்த விசாரணையின் போது மாஜிஸ்திரேட்டை ஒருமையில் விமர்சித்ததாக தூத்துக்குடி ஏ.எஸ்.பி குமார், டி.எஸ்.பி பிரதாபன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டுள்ளது. நாளை ஆஜராகவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘மாரீசன்’ படம் எப்படி இருக்கு? டிவிட்டர் விமர்சனம் இதோ!
July 24, 2025