அத்திக்கடவு-அவிநாசி விழா : அதிருப்தியில் செங்கோட்டையன்? ஜெயக்குமார் விளக்கம்!
அத்திக்கடவு-அவிநாசி திட்ட விழாவை அதிமுக ஏற்பாடு செய்யவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்து பேசியுள்ளார்.

சென்னை : பிப்ரவரி 9-ஆம் தேதி அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அருகே கஞ்சப்பள்ளியில் நடத்தப்பட்டது. பாராட்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இருப்பினும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொள்ளாதது ஒரு கேள்வியாக எழும்பியது.
இதனையடுத்து, ஈரோடிட்டில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ” நிகழ்ச்சி தொடர்பாக வைக்கப்பட்டுள்ள பேனர்களில் உருவாக்கிய புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவர் அம்மா ஜெயலலிதா படங்கள் இல்லை. அதனால் விழாவில் கலந்துகொள்ளவில்லை” என விளக்கம் அளித்து பேசியிருந்தார். எனவே, இது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த சூழலில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது விளக்கம் அளித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” கோவையில் நடைபெற்ற அத்திக்கடவு-அவிநாசி திட்ட விழா என்பது அதிமுக ஏற்படுத்திய நிகழ்ச்சி இல்லை. விவசாயிகள் ஏற்படுத்திய ஒரு நிகழ்ச்சி. அதிமுக ஆட்சியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் தான் இந்த அத்திக்கடவு-அவிநாசி திட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்பிறகு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் இருந்தபோதே திட்டத்தின் 80 சதவீத பணிகள் முடிவுற்றது. அடுத்ததாக, 20 சதவீத பணிகளை மட்டும் தான் ஸ்டாலின் அரசு மெத்தனமாக மேற்கொண்டனர். இந்த திட்டத்தை உடனடியாக முடித்தால் அதிமுகவுக்கு நல்ல பெயர் வந்துவிடும் என்ற காரணத்தால் தான் கிடப்பிலே போட்டு இருந்தார்கள். கிட்டத்தட்ட அவர்கள் இந்த திட்டத்தட்டை 3 வருடங்கள் கழித்து தொடங்கி வைத்துள்ளனர்.
இந்த திட்டம் தொடங்கி இப்போது நிறைவேறியதற்கு முழுக்க முழுக்க றைந்த முதல்வர் ஜெயலலிதாவும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என்று நான் சொல்வேன். இந்த அத்திக்கடவு-அவிநாசி திட்ட விழா என்பது, விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்டது. இந்த விவசாய கூட்டமைப்பில் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த விவசாயிகளும் அதில் இருக்கிறார்கள். இந்த திட்டத்திற்காக சிறை சென்றவர்கள் போராடியவர்கள் என பலரும் இந்த சங்கத்தில் உள்ளனர்.
அந்த நிகழ்ச்சியை அதிமுக ஏற்பாடு செய்யவில்லை. முழுக்க முழுக்க விவசாயிகள் கூட்டமைப்பு தான் ஏற்பாடு செய்திருந்தது. எனவே, இந்த மாதிரி ஒரு நிகழ்வில் அரசியல் இருக்கக்கூடாது என்ற காரணத்துக்காக தான் அந்த கூட்டமே நடத்தப்பட்டது. எனவே இந்த நிகழ்ச்சியை அப்படித்தான் பார்க்க வேண்டும்” எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கம் – பிரதமர் மோடி கவலை.!
March 28, 2025