தமிழகத்தில் 3 வருடங்களுக்கு மேலாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் நடைபெறுகிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9 தேதி தொடங்கியது.வாக்கு எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி நடைபெறுகிறது.
கடலூர் பண்ருட்டி அருகே நடுக்குப்பத்தில் ஊராட்சி மன்ற பதவிகளுக்கு ஏலம் எடுக்கப்பட்டது என்று தகவல் வெளியானது.இந்த ஏலத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ரூ.50 லட்சமும் ,துணை தலைவர் பதவிக்கு ரூ.15 லட்சமும் தொகையாக நிர்ணயிக்கப்பட்டது ஊராட்சி தலைவர்,துணைத் தலைவர் பதவிகள் ஏலம்விடப்பட்டது என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏறபடுத்தியது.இதனையடுத்து மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது.மேலும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் கூறுகையில் ,இந்த தகவல் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் பதவிகள் ஏலம்போன தகவல் வெளியானது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதிகாரிகள் மற்றும் போலீசார் நடுக்குப்பத்தில் உள்ள கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர்.நடுக்குப்பம் கிராம ஊராட்சி செயலருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…