சொந்த நாட்டு மக்களிடம் குடியுரிமை கேட்பவர்கள்தான் ஆன்ட்டி இந்தியன் – சீமான்

சொந்த நாட்டு மக்களிடம் குடியுரிமை கேட்பவர்கள்தான் ஆன்ட்டி இந்தியன் என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, டெல்லியில் 20 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக தெரியவில்லை. இதனால் விவசாயிகள் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், எண்ணற்ற பேராபத்துகள் இருப்பதால் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்திக்கிறோம். ஒரே கல்வி கொள்கை, ஒரே தேர்தல் போன்று ஒரே வேளாண் சந்தையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. சொந்த நாட்டு மக்களிடம் குடியுரிமை கேட்பவர்கள்தான் ஆன்ட்டி இந்தியன் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025