செமஸ்டர் கட்டணத்தை செலுத்துவதற்க்கான அவகாசத்தை வரும் 19-ஆம் தேதி வரை நீட்டித்தது அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் மாணவர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பட்டது. அதில், நடப்பு செமஸ்டர் கட்டணத்தை வருகின்ற ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டுமென்றும் கட்டணம் செலுத்த தவறிய மாணவர்கள் ரூ.200 முதல் ரூ.500 வரை அபராதம் செலுத்த வேண்டும்.
செப்டம்பர் 5-ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்த தவறினால் அந்த மாணவர்கள் தங்களுடைய படிப்பை தொடர விரும்பவில்லை என்று கருதப்பட்டு மாணவர்கள் பெயர்கள் செப்டம்பர் 6-ஆம் தேதி பதிவேட்டில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அந்த அறிக்கையில் தெரிவித்தது.
இதனிடையே செப்டம்பர் 5-ஆம் தேதிக்குள் செமஸ்டர் கட்டணங்களை செலுத்தாத மாணவர்களின் பெயர்கள் நீக்கப்படும் என்ற அண்ணா பல்கலைக்கழக உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் செமஸ்டர் கட்டணத்தை செலுத்துவதற்க்கான அவகாசத்தை வரும் 19-ஆம் தேதி வரை நீட்டித்தது அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 5ஆம் தேதிக்கு பதிலாக செப்டம்பர் 19 ஆம் தேதி வரை கல்விக்கட்டணம் கட்டலாம் என்று தெரிவித்துள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…