கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள கொந்தகை, அகரம் மற்றும் கடலூர் ஆகிய ஊர்களை உள்ளடக்கிய பகுதிகளில் தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஐந்தாம் கட்ட ஆய்வில் செங்கல் கட்டுமானத்தின் தொடர்ச்சிகள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகின்றன. இதில் இரும்பு உலை அமைப்பு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.
கொந்தகையில் நடைபெற்றுவரும் அகழாய்வு பணியில், முதுமயள் தாலி, எலும்புக்கூடுகள், மண்டையோடுகள் என தொடர்ச்சியாக கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில், தமிழர் நாகரீகத்தின் தாய்மாடி என போற்றப்படும் கீழடி அகழாய்வின் ஒரு பகுதியாக உள்ள மணலூரில், அகழாய்வு பணியின் போது ஒரு குழந்தையின் எலும்புக்கூடு ஒன்றை தொல்லியல் துறையினர் கண்டறிந்துள்ளனர்.
இந்த எலும்புக் கூட்டிற்கு எந்தவித சேதமும் ஏற்படாத வண்ணம் தொல்லியல் துறையினர் கவனமாக பராமரித்து வரும் நிலையில், குழந்தையின் எலும்புக்கூடு மொத்தம் 95 சென்டிமீட்டர் நீளமும், அதன் தலை 20 சென்டிமீட்டர் யிருப்பதாகவும் கூறப்படுகிறது. டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட பின்னரே எலும்புக்கூடுகளின் காலம் என்பது தெரியவரும்.
சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…
டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…
சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…