நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகப்படுத்தப்படவிருக்கிற ‘தேர்தல் சட்டம் (திருத்தம்) மசோதா 2021’ ஆனது தேர்தல் ஜனநாயகத்துக்கு ஆபத்தானது,உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது.அதை அறிமுகப்படுத்த வேண்டாம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று எம்.பி.ரவிக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
மத்திய அரசு நாளை (20.12.2021) அறிமுகப்படுத்தவுள்ள தேர்தல் சட்ட திருத்த மசோதா 2021-க்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்து நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் அளித்துள்ளதாகவும்,இந்த மசோதா தேர்தல் ஜனநாயகத்துக்கு ஆபத்தானது,உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது.அதை அறிமுகப்படுத்த வேண்டாம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று விழுப்புரத்தை சேர்ந்த விசிக எம்பி ரவிக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
“இந்திய ஒன்றிய அரசு நாளை (20.12.2021) அறிமுகப்படுத்தவுள்ள தேர்தல் சட்டங்கள் (திருத்த) மசோதா 2021 க்கு அறிமுக நிலையில் எனது எதிர்ப்பைத் தெரிவித்து நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் அளித்துள்ளேன். அதில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளேன்:
“ இந்த மசோதா தேர்தல் சட்டம் 1950 பிரிவு 23 இல் துணைப்பிரிவு 3 க்குப் பிறகு ஒரு உட்பிரிவை சேர்க்கிறது. அனைத்து வாக்காளர்களும் தமது ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பதை இப்பிரிவு கட்டாயமாக்குகிறது. இது புட்டசாமி வழக்கில் ‘ஆதார் விவரங்களை அங்கீகரிக்கப்பட்ட நலத் திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும்’ என இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானது. வாக்காளர் அடையாள அட்டைகளுடன் ஆதாரை இணைக்கும் எந்தவொரு முயற்சியும், ஆதாருடன் இணைக்கப்பட்ட மக்கள்தொகைத் தகவல்களை வாக்காளர் தரவுத்தளத்துடன் இணைக்க வழிவகுக்கும்.
இது ( சாதி, மத, இன) அடையாளங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட பிரிவினரின் வாக்குரிமையைப் பறிப்பதற்கும், தேர்தலின்போது இலக்கு வைத்து விளம்பரம் செய்வதற்கும்,தரவுகளின் அடிப்படையிலான வணிகச் சுரண்டலுக்குமான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
எனவே, இந்த மசோதாவை அறிமுகம் செய்யாமல் கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளேன்.
மேலும்,இந்த மசோதாவானது தேர்தல் ஜனநாயகத்துக்கு ஆபத்தானது, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது.அதை அறிமுகப்படுத்த வேண்டாம் என மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அரசை வலியுறுத்தவேண்டும்”,என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…