நகர்ப்புறங்களில் அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் அகற்றப்படும்… கே.என்.நேரு விளக்க அறிக்கை.!

நகர்ப்புறங்களில் அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் அடியோடு அகற்றுவதே தமிழக அரசு கொண்டுவந்த சாத்தியத்தின் நோக்கம் என்று கே.என்.நேரு விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பரப்பலகைகள் குறித்த, அரசின் நிலைப்பாடு மற்றும் உண்மைத்தன்மையை விளக்கும் அறிக்கையை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தை குறிப்பிட்டு அமைச்சர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
விளம்பரப்பலகைகள் நிறுவுவதை முறைப்படுத்தும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் வகுக்கப்பட்டு, சட்டம் மற்றும் விதிகள் கடந்த ஏப்ரல் 13 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் நோக்கம் அனுமதியில்லாத விளம்பரப்பலகைகளை அனுமதிக்க கூடாது என்பது தான்.
சட்டத்தை மீறி விளம்பரப் பலகைகள் வைக்கப்படும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், கடந்த 6 மாதங்களில் 500 க்கும் மேற்பட்ட விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளன என்றும் அறிக்கையில் அவர் தெரிவித்தார். எனவே அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பரப் பலகைகளை அடியோடு அகற்றுவது தான் அரசின் நோக்கம் என்பதை தெளிவுபடுத்த விரும்புவதாக மேலும் அறிக்கையில் அவர் கூறினார்.