அவசர அவசரமாக வேளாண் சட்டத்தை நிறைவேற்றியது பாஜக அரசுதான் என இன்று சேலத்தில் நடைபெறும் போராட்டக்களத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார்.
அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேச விவசாயிகள் தொடர்ந்து 9 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சிகளின் ஆதரவு அதிகமாகவே உள்ளது. மேலும் போராடக்கூடிய விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், டெல்லியில் போராட்டம் நடத்தி வரக்கூடிய விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மாநிலம் முழுவதும் திமுக சார்பில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றுவருகிறது. சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் பங்கேற்றுள்ளார். சேலத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது .இந்தப் போராட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள், விவசாயிகளின் போராட்டம் வெற்றி பெற கூடாது என அதிமுக அரசு செயல்படுவதாகவும், வேளாண் சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றியது பாஜக அரசுதான் எனவும் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…