காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதியில்.., பாஜகயுடன் 5, அதிமுகயுடன் 15 நேரடி மோதல்..!

Published by
murugan

தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 25 தொகுதிகளில் அதிமுகவுடன் 15 தொகுதிகளிலும், பாஜகவுடன் 5 தொகுதிகளில் நேரடியாக மோதுகிறது.

ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றவுள்ளது. இதனால், அனைத்து கட்சிகளும் தீவிரமாக தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். இதற்கிடையில், நேற்று அதிமுக தனது கூட்டணி கட்சிகளுக்கான தொகுதியை ஒதுக்கீடு செய்தது.

இந்த பட்டியல் வெளியான பிறகு பல இடங்களில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காரணம் அதிமுகவினருக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதால் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில், தற்போது எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் கையெழுத்தாகி வருகிறது.

அந்த வகையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி போட்டியிடம் 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 25 தொகுதிகளில் அதிமுகவுடன் 15 தொகுதிகளிலும், பாஜகவுடன் 5 தொகுதிகளில் நேரடியாக மோதுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுதிகள் தான் காங்கிரசும்,  பாஜக மற்றும் அதிமுக நேரடியாக மோதவுள்ளது.

5 தொகுதிகளில் காங்கிரஸ்- பாஜக நேரடி மோதல்:

  • கோவை தெற்கு,
  • காரைக்குடி,
  • ஊட்டி,
  • குளச்சல்,
  • விளவங்கோடு

15 தொகுதிகளில் காங்கிரஸ்- அதிமுக நேரடி மோதல்:

  • பொன்னேரி,
  • ஸ்ரீபெரும்புதூர்,
  • ஊத்தங்கரை,
  • ஓமலூர்,
  • மேலூர்,
  • சிவகாசி,
  • ஸ்ரீவைகுண்டம்,
  • தென்காசி,
  • அறந்தாங்கி,
  • நாங்குநேரி,
  • கள்ளக்குறிச்சி,
  • ஸ்ரீவில்லிபுத்தூர்,
  • திருவாடானை,
  • உடுமலைப்பேட்டை,
  • மயிலாடுதுறை
Published by
murugan

Recent Posts

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 minutes ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

2 hours ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

2 hours ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

3 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

19 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

19 hours ago