டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு எதிராக பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டம்!
- தமிழகத்தில் ஜூன் 15 முதல் டாஸ்மாக் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- டாஸ்மாக் கடை திறப்பிற்கு எதிராக பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டம்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிக அளவில் காணப்பட்டதல் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. தற்பொழுது கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் சற்று குறைய தொடங்கி உள்ளதால், ஜூன் 14ம் தேதியுடன் முடிவடைய உள்ள ஊரடங்கு ஜூன் 21ஆம் தேதியுடன் நீட்டித்து முதல்வர் உத்தரவு வெளியிட்டுள்ளதுடன், மேலும் சில தளர்வுகளையும் அறிவித்துள்ளார்.
கொரோனா நோய் தொற்று அதிகம் உள்ள கோயமுத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் மட்டும் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மற்ற பிற இடங்களில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டுமின்றி அனைத்து கடைகளும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் ஜூன் 15ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிராக இன்று பாஜகவினர் வீடுகளில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் மேற்கொள்வர் என தமிழக பாஜக கட்சி தலைவர் எல்.முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.