BJP State President Annamalai [File Image]
சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முழுதாக வரவில்லை. இருந்தாலும் மக்கள் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தபால் வாக்குகள் முதல், அடுத்து எண்ணப்பட்ட வாக்கு இயந்திர வாக்குகள் வரையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலையில் உள்ளார். பாஜகவின் NDA கூட்டணி சார்பாக களமிறங்கிய பாமக வேட்பாளர் சி.அன்புமணி தொடர்ந்து இரண்டாம் இடமே பெற்றுள்ளது. இதனால் திமுக வெற்றிபெறுவது ஏறக்குறைய உறுதியாகி திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்
இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் முடிவுகளை இப்போதுதான் நான் பார்க்கிறேன். இடைத்தேர்தல் முடிவு என்பது தமிழக மக்கள் மனநிலை என்று நினைத்தால் அது தவறு.
தேர்தல் முடிவில் மாற்று கருத்துகள் இருந்தாலும், நடைபெற்றது தேர்தல். மக்கள் வாக்களித்துள்ளனர். இது அவர்களின் முடிவு. அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆளும் கட்சியின் பல்வேறு தடைகளையும் மீறி வாக்களித்த மக்களளுக்கு நன்றி. இவ்வளவு வாக்குகள் எங்களுக்கு கிடைத்துள்ளது என்பதும் எங்களுக்கு சாதனை தான்.
ஆனால், முன்னர் நடந்த இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெற்று, பின்னர் பொதுத்தேர்தலில் அதே கட்சி தோற்றுள்ள வரலாறு உள்ளது. இடைத்தேர்தல் முடிவுகள் தான் தமிழக மக்களின் மனநிலை என்று அமைச்சர்கள் நினைத்தால், 2026 சட்டமன்ற தேர்தல் ரிசல்ட் வேறுமாதிரியாக இருக்கும்.
இதுவரை நடந்த இடைத்தேர்தலில் 87 சதவீதம் ஆளும் கட்சி தான் ஜெயித்துள்ளது. ஆனால், அடுத்து நடந்த பொதுத் தேர்தலில் ரிசல்ட் மாறியுள்ளது. இதுதான் தமிழக மக்கள் எண்ணம் என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறினார்.
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…
மலேசியா : தாய்லாந்து - கம்போடியா ஆகிய இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக மலேசிய பிரதமர்…
டெல்லி : பஹல்காமில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர்…