அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் போது மோதல் ஏற்பட்டதால் பாஜக, விசிகவினர் மீது வழக்குப்பதிவு.
அம்பேத்கரின் 132வது பிறந்தநாளையொட்டி நேற்று நாடு முழுவதும் அவரது உருவ சிலைக்கு அரசியல் தலைவர் உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் சென்னை, சேலம், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் போது பாஜக, விசிக இடையே மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில், சென்னையில் அம்பேத்கர் சிலைக்கு அணிவித்தபோது மோதல் ஏற்பட்ட சம்பவத்தில் பாஜகவினர் 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலை மாலை அணிவிக்கும்போது பாஜக, விசிக இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் உள்ளிட்ட 150 பேர் மீது கோயம்பேடு பேருந்து நிலைய போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. சட்டவிரோதமாக செயல்படுதல், ஆயுதங்கள், காயம் விளைவித்தல், ஆபாசமாக பேசுதல் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தகவல் கூறப்படுகிறது.
இதுபோன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக பாஜக நிர்வாகிகள் 50 பேர் மீதும், விசிக நிர்வாகிகள் 30 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும், மோதலில் ஈடுபட்டது மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக பாஜக, விசிக மீது தலா 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…