, , ,

குண்டு வெடிக்கும் மேல்மருவத்தூர் கோவிலில் ..!மர்மநபர் மிரட்டல்

By

மேல்மருவத்தூர் கோவில் மற்றும் ரயில் நிலையம் இரண்டு விரைவு ரயில்களுக்கு வெடிகுண்டு வைக்க போவதாக வந்த மிரட்டல்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மேல்மருவத்தூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தபால் கடிதம் மூலமாக செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு மேல்மருவத்தூரில் வருகின்ற கன்னியாகுமரி மற்றும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிகலுக்கும், மேலும் மேல்மருவத்தூர் கோவிலுக்கும், ரயில் நிலையத்திற்கும் வெடிகுண்டு வைக்கப் போவதாக மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பி வைத்தார்.

இந்த  மிரட்டல் கடிதம் தொடர்பாக கடிதம் அனுப்பியது யார் என்றும் மிரட்டலை அடுத்து  ரயில்வே போலீசார் மேல்மருவத்தூர் வரும் ரயில்கள் அனைத்தையும் நிறுத்தி சோதனை செய்தனர்.மேலும் குண்டு வைக்க போவதாக மிரட்டல் விடுத்தவர்  மேல்மருவத்தூர் பகுதியை சேர்ந்த கங்காதரன் என்பது விசாரணையில் தெரியவரவே அவரை போலீசார் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ரயில் நிலையம் மற்றும் கோவிலுக்கு குண்டு வைக்கபோவதாக வந்த மிரட்ட கடிதத்தை அடுத்து பரபரப்பு காணப்பட்டது.

 

Dinasuvadu Media @2023