ரத்த அழுத்தத்தில் மாறுதல் காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்பொழுது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ரத்த அழுத்தத்தில் மாறுதல் காரணமாக நடிகர் ரஜினிகாந்த், ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த 25 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது,
ரஜினிகாந்துக்கு ரத்த அழுத்த மாறுபாடு சீராகி உடல்நிலை தேறி, உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாகவும், இன்று ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என கூறப்பட்டு வந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் சென்னை புறப்படவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
மேலும், ஒரு வாரத்திற்கு முழு ஓய்வு எடுக்க வேண்டும். இரத்த அழுத்தத்தை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். உடல் உழைப்பை குறைத்துக் கொள்ளவேண்டும். மன அழுத்தம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கொரோனா தொற்று ஏற்படும் எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…