#Breaking: சேலத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் – ஆட்சியர் அறிவிப்பு!!

Published by
பாலா கலியமூர்த்தி

சேலம் மாவட்டத்தில் நாளை முதல் அனைத்து கடைகளும் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் நாளையுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு, கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இதனிடையே, கொரோனா பரவல் மீண்டும் சற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை ஆட்சியர்கள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், தற்போது சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவாமல் தடுக்க புதிய கட்டுப்பாடுகளை அம்மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவித்துள்ளார்.

சேலம் மாநகராட்சி:

  • சேலம் மாநகர எல்லைக்குள் செயல்படும் அனைத்து மால்கள், ஜவுளி கடைகள், நகைக் கடைகள், வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட்கள் ஆகியவை மாலை 6.00 மணிவரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மேலும், மேற்படி வணிக நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை செயல்பட அனுமதியில்லை.
  • செவ்வாய்பேட்டை மெயின்ரோடு, நாவலர் நெடுஞ்செழியன் சாலை, லாங்லி நோடு, பால் மார்க்கெட், லீபஜார், வீரபாண்டியார் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மாலை 6.00 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
  • வ.உ.சி மார்க்கெட், சின்னகடை வீதி ஆகிய இடங்களில் செயல்படும் பூ, பழம் மற்றும் காய்கறி கடைகள் மாலை 6.00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
  • துணிக்கடைகள், நகைக்கடைகள், மால்கள், வணிக வளாகங்கள் போன்ற அனைத்து வணிக நிறுவனங்களிலும் குளிர்சாதன வசதி பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.

சேலம் ஊரகம்:

  • வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிற நாட்களில் ஏற்காட்டிற்கு பயணிக்கும் பயணிகள் கோவிட்-19 கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் செலுத்தி சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர்.
  • கொங்கணாபுரம் வாரச்சந்தை, வீரகனூர் வாரச்சந்தை,வரும் 23ம் தேதி வரை செயல்பட தடை விதிக்கப்படுகிறது என்றும் மேட்டூர் அணை பூங்கா 23ம் தேதி வரை பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
  • இறைச்சி மற்றும் மீன் சந்தைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு திறந்த வெளியில் தனித்தனி கடைகளாக பிரித்து விற்பனை செய்வதை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

MI vs GT: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…

6 minutes ago

சூடு பிடிக்க தொடங்கிய ‘கூலி’ பட ப்ரோமோஷன்.., கவனத்தை ஈர்க்கும் கிளிம்ப்ஸ் வீடியோ.!

சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…

38 minutes ago

சுரங்க முறைகேடு வழக்கு: கர்நாடகா பாஜக எம்.எல்.ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை.!

கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…

1 hour ago

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…

1 hour ago

30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் – உணவு பாதுகாப்பு துறை.!

சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…

2 hours ago

“ஆர்யா என் வீட்டையே இடிச்சிட்டான்..” – இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த சந்தானம்.!

சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…

3 hours ago