#BREAKING: கைதான அன்புமணி ராமதாஸ் விடுவிப்பு!

கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அன்புமணி ராமதாஸ் விடுதலை செய்யப்பட்டார்.
நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் விவசாய நிலத்தை கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அப்போது, என்எல்சி நிறுவனத்திற்கு நுழைய முயன்றபோது, போலீசார் தடுத்து நிறுத்தி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரை கைது செய்து, அருகில் உள்ள மண்டபத்தில் வைத்திருந்தனர்.
இந்த நிலையில், என்.எல்.சி.க்கு எதிரான முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு கைதான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுவிக்கப்பட்டார். கைதைக் கண்டித்து, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் தடுப்பு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.