ஐடி அதிகாரிகளை தாக்கியவர்களுக்கு ஜாமீன் ரத்து!

கரூர் வருமான வரி அதிகாரிகளை தாக்கிய 19 பேருக்கு வழங்கிய ஜாமீனை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்தது.

Madurai High Court

கரூர் வருமான வரி அதிகாரிகளை தாக்கிய 19 பேருக்கு வழங்கிய ஜாமீனை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்தது.

கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் கீழமை நீதிமன்றத்தின் ஜாமீனை உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. ஜாமீன் ரத்து செய்யப்பட்ட 19 பேரும் 3 நாட்களில் கரூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கரூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணை செய்து உரிய உத்தரவு பிறப்பிக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை நடந்த போது வருமான வரி அதிகாரிகள் தாக்கப்பட்டதாக வழக்கு தொடர்ந்திருந்தனர்.