வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இன்று காலை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.இதனையடுத்து,இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து,நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில்,வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழ்த்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் மே 8 ஆம் தேதி புயலாக வலுபெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இந்த புயலுக்கு ‘ஆசானி புயல்’ என்று வானிலை ஆய்வாளர்கள் பெயரிடுவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த புயல் தொடர்ந்து நகர்ந்து,மே 10 ஆம் தேதி ஆந்திரா ஒடிசா கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.இதன்காரணமாக,ஆந்திரா, ஒடிசா,மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால்,தமிழகத்தை பொறுத்தவரை இதன் தாக்கம் இருக்காது எனவும் வெப்பநிலை அதிகரிப்பு தான் இருக்கும் எனவும் ,இருப்பினும் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…
கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…
கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…
பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…