#BREAKING: தமிழக காவல் அதிகாரிகள் 8 பேருக்கு மத்திய அரசு விருது!

குற்ற வழக்குகளில் சிறப்பாக விசாரணை மேற்கொண்டதற்கான மத்திய உள்துறை அமைச்சரின் விருதுகள் 152 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் குற்ற வழக்குகளில் சிறப்பாக விசாரணை மேற்கொண்டதற்கான 152 காவலர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் விருது அரிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் எட்டு பேர் இடம்பெற்றுள்ளனர். அதன்படி, காவல் ஆய்வாளர்கள் சரவணன், அன்பரசி, கவிதா, ஜெயவேல், கலைச்செல்வி, மணிவண்ணன், சிதம்பர முருகேசன், கண்மணி ஆகியோருக்கு விருது வழங்கப்படுகிறது.
இந்த விருதுகளைப் பெறும் பணியாளர்களில், 15 பேர் சிபிஐ, மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா காவல்துறையிலிருந்து தலா 11 பேர், உத்தரபிரதேசத்தில் இருந்து 10 பேர், கேரளா மற்றும் ராஜஸ்தான் காவல்துறையில் இருந்து 9 பேர், 7 பேர் பீகாரைச் சேர்ந்தவர்கள், 6 பேர் குஜராத், கர்நாடகா, டெல்லி காவல்துறையைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ளவர்கள் மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களில் 28 பெண் போலீஸ் அதிகாரிகள் அடங்குவர் எனவும் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025