#BREAKING: சென்னை ஐஐடியில் மேலும் 25 பேருக்கு.. XE வகை – சுகாதாரத்துறை செயலாளர்

சென்னை ஐஐடியில் இதுவரை 55 பேருக்கு கொரோனா உறுதியானது என்று சுகாதாரத்துறை செயலாளர் தகவல்.
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐஐடியில் 1,420 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் மொத்தம் இதுவரை 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதித்தவர்கள் ஐ.ஐ.டி வளாகத்தில் தனிமைபடுத்தப்பட்டு இருக்கின்றனர். கொரோனா கண்டறியப்பட்ட அனைவருக்கும் குறைவான அளவு பாதிப்பு தான். சிறிய அளவில் தொண்டை எரிச்சில் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
எந்தவகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது 2 வாரங்களுக்கு பிறகே தெரியவரும். தமிழகத்தில் இதுவரை XE வகை கொரோனா கண்டறியப்படவில்லை. இப்போதுவரை தொற்று பாதிப்பு விகிதம் குறைவாகதான் உள்ளது. கொரோனா குறித்து மக்கள் பதற்றம் அடையும் சூழல் தமிழ்நாட்டில் இல்லை என்றும் கொரோனா கட்டுக்குள் தான் உள்ளது எனவும் தெரிவித்தார். எனவே, சென்னை ஐஐடியில் ஏற்கனவே 30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 55-ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025