#BREAKING: தமிழகத்தில் புதிதாக 5,980 பேருக்கு கொரோனா.! இன்று மட்டும் 80 பேர் உயிரிழப்பு.!

தமிழகத்தில் புதிதாக 5,980 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3,73,410 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,980 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை, மொத்தமாக 3,73,410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1,294 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் எண்ணிக்கை 1,24,071 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இன்று 80 பேர் பலியாகியுள்ளனர். அதில், 23 பேர் தனியார் மருத்துவமனையிலும், 57 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.
இதனால் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,420 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 5,603 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 3,13,280 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 73,547 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 41,36,490-ஐ கடந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025