#BREAKING: செல்வமுருகன் மரணம்.. ஆய்வாளர் ஆறுமுகம் இடமாற்றம்…!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூரை சேர்ந்தவர் செல்வமுருகன் (வயது 39). இவருக்கு பிரேமா என்ற மனைவியும் , 2 குழந்தைகளும் உள்ளனர். இதனிடையே கடந்த 30-ஆம் தேதி திருட்டு வழக்கு ஒன்றில் நெய்வேலி போலீசார் செல்வமுருனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பின்பு , நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை விருத்தாசலம் கிளை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்பு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் கடந்த 4-ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் தாக்கியதால்தான் செல்வமுருகன் உயிரிழந்ததாக அவரது உறவினா்கள் புகார் தெரிவித்து வருகின்றனா். இந்நிலையில், விருத்தாச்சலம் கிளை சிறையில் உயிரிழந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஆய்வாளர் ஆறுமுகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025