#BREAKING : விபத்து இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது – நீதிபதி வேதனை

இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டாமல், சமசீரான முறையில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு.
சென்னை உயர்நீதிமன்றத்தில், மரம் விழுந்து இருவரு பலியான முதியவர், ஆசிரியர் குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், ஆவணங்கள் ஆராயப்பட்டு முறையான இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து நீதிபதி கூறுகையில்,இழப்பீடு வழங்கப்படும் நடைமுறையில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், சிலருக்கு ரூ.1 கோடி, சிலருக்கு ரூ.1 லட்சம் எனவும் இழப்பீடு வழங்கப்படுவதாக வேதனை தெரிவித்தார்.
மேலும், இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டாமல், சமசீரான முறையில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து, இழப்பீடு வழங்குவது தொடர்பாக 8 வாரங்களில் விதிகளை வகுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025