பூம்புகார் அருகே தருமகுளத்தில் தன்ராஜ் என்பவர் நகை அடகு கடை வைத்துள்ளார். இவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. தன்ராஜ் இவரது மனைவி ஆஷா (45), மகன் அகில் (24), மருமகள் பெயர் நிக்கில் ஆகியோர் சீர்காழி ரயில்வே ரோடு பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை தன்ராஜ் வீட்டில் காலை 6 மணி அளவில் வட மாநிலத்தை சார்ந்த 4 பேர் வீட்டில் உள்ளே சென்று வீட்டில் இருந்த 15 கிலோ தங்கம் நகையை கொள்ளையடித்து தன்ராஜ் மனைவி ஆஷா, அவரது மகன் அகில் (25) ஆகிய இருவரையும் கழுத்தறுத்து கொன்று விட்டு நகைகளுடன் வீட்டில் இருந்த சிசிடிவி ஹார்ட் டிஸ்க்கையும், தன்ராஜின் காரையும் திருடிக் கொண்டு தப்பி சென்றனர்.
மேலும், அடகு கடை உரிமையாளர் தன்ராஜ் மற்றும் அவரது மருமகள் ஆகியோரை கொள்ளையர்கள் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், அந்த வடமாநில கொள்ளையர்கள் அருகில் இருந்த கிராமத்தில் காரை நிறுத்தி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் போலீசார் அங்கு தேடிவந்த நிலையில், கார் நின்ற கிராமத்தில் இருந்து அருகில் உள்ள கிராமத்தில் வடமாநில கொள்ளையர்கள் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த 3 வடமாநில கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்களிடன் இருந்த 2 நகை பைகளில் ஒரு பையை வயலில் வீசியதால் அதை எடுக்க சென்றபோது, 3 பேரில் ஒருவர் போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றபோது போலீசார் என்கவுன்டர் செய்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…