6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புக்கு ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகள் திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டது. மேலும் அனைத்து விதமான தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட 10-ம் வகுப்பு தேர்வுகள் வருகின்ற ஜூன் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும், மூடப்பட்ட பள்ளிகள் எப்போது..? திறக்கப்பட உள்ளது என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்தும், 10-ம் வகுப்பு தேர்வு மையங்கள் அமைப்பது குறித்தும் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதையடுத்து, தமிழகத்தில் ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புக்கு ஆகஸ்ட் மாதத்திலும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புக்கு செப்டம்பரில் வகுப்புகளை தொடங்க தமிழக அரசு திட்டம் என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…