#Breaking: மேகதாது அணை: 12ல் அனைத்துக்கட்சி கூட்டம் – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு!!

Default Image

மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக வரும் 12 ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடர்பாக, சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழக முதலமைச்சர், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து மேகதாது அணை பிரச்சினை குறித்து தமிழ்நாட்டின் நிலைபாட்டை விளக்கி, நமது மாநில விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், அண்மையில் மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்து, இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார். மேகதாது அணை அமைக்க தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது எனக் கோரி கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியபோது, இந்த அணை கட்டுவதால் தமிழ்நாடு விவசாயிகளின் நலன் பாதிக்கப்படும்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இது எதிராக அமையும் என்றும் திட்டவட்டமாக விளக்கி இந்த அணை அமைந்திட தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என உறுதிபடத் தெரிவித்து, முதலமைச்சர் முக ஸ்டாலின, கர்நாடக முதல்வருக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்கள்.

இந்த சூழ்நிலையில், விவசாயிகளின் நலனை காப்பதில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து தரப்பினரின் ஒருமித்த எண்ணங்கள் பிரதிபலிக்கும் வகையில், மேகதாது அணை பிரச்சனை குறித்து சட்டமன்றக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில், வரும் 12ம் தேதி காலை 10-30 மணியளவில் தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சட்டமன்றக் கட்சிகளுக்கும், முதலமைச்சர் முக ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்