Breaking news:காஞ்சிபுரம் நகரத்திற்கு மூன்று நாள்கள் விடுமுறை !

அத்திவரதர் கடந்த மாதம் 1-ம் தேதி முதல் பக்தர்களுக்காக வசந்த மண்டபத்தில் காட்சியளித்து வருகிறார். அத்திவரதர் முதல் 31 நாள்கள் பக்தர்களுக்கு சயன கோலத்தில் காட்சியளித்தார். பின்னர் கடத்த 1-தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
அத்திவரதர் இன்னும் பத்து நாள்கள் மட்டுமே காட்சியளிக்க உள்ளதால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து உள்ளது.இந்நிலையில் இன்று தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு , அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.அத்திவரதர் வைபவம் தொடர்பாக தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆகஸ்ட் 13 ,14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025