#BREAKING : அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக ஆர்.வேல்ராஜ் நியமனம்…!

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக ஆர்.வேல்ராஜ் அவர்களை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்த சூரப்பா ஒய்வு பெற்றதையடுத்து, தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக ஆர்.வேல்ராஜ் அவர்களை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்துள்ளார். இவர் 3 ஆண்டுகள் பணியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள வேல்ராஜ் அவர்கள், அண்ணா பல்கலைக்கழக ஆற்றல் ஆய்வு துறை பேராசியராக, இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார். கல்வித்துறையில் 33 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், 7 நாடுகளுக்கு சென்று ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், தற்போது அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக பொறுப்பேற்றுள்ள ஆர்.வேல்ராஜ் ஓரிரு நாட்களில் பொறுப்பேற்பார் என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025