சென்னை:கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில்,தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக,சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய தொடர் மழை பெய்தது. இதனால்,2015-ம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் 207 மிமீ மழை பதிவாகியுள்ளது.இருப்பினும்,நேற்று முதல் மீண்டும் சென்னையின் நகர், புறநகர் என அனைத்து இடங்களிலும் பாரபட்சமின்றி மழை பெய்து வருகிறது.
இதன்காரணமாக,சென்னையில் எங்கு திரும்பினாலும் வெள்ளகாடாக காட்சியளிக்கிறது.தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து,வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.மேலும்,சென்னையின் முக்கிய சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் முழ்கி கிடக்கின்றன.அதேபோல,வெளி மாவட்டங்கள், மாநிங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதனால்,மழை நீரை வெளியேற்றும் பணிகளில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் மீட்பு படையினர் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில்,நேற்று முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடசென்னை உள்ளிட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, மக்களுக்கு நிவாரணம் வழங்கினார். அந்த வகையில் இன்றும் 2-வது நாளாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட துறைமுகம் தொகுதிக்குட்பட்ட கல்யாணபுரம் கால்வாயை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு,மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கல்யாணபுரம் மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் முதல்வர் வழங்கினார்.மேலும்,மீட்பு பணிகளை விரைந்து முடிக்குமாறும் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில்,சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நேரில் ஆய்வு செய்து வருகிறார். மேலும்,மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு,மக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.அதே நேரத்தில்,நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறார்.
அவருடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினரும் பங்கேற்று மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர்…
அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…
ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…
கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல்…