#BREAKING: தமிழகத்தில் வங்கி சேவை நேரம் குறைப்பு – மாநில வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு!!

கொரோனா எதிரொலி காரணமாக தமிழகத்தில் நாளை முதல் வாடிக்கையாளர் வங்கி சேவை நேரம் குறைத்து அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி, இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் மற்றும் மேலும் சில கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் நாளை முதல் வாடிக்கையாளர் வங்கி சேவை நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாநில வங்கியாளர்கள் குழுமம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, நாளை முதல் 30ம் தேதி வரை வங்கி சேவை நேரம் குறைக்கப்படுகிறது என மாநில வங்கியாளர்கள் குழுமம் கூறியுள்ளது.
வழக்கமாக ஆறு மணிநேரம் வங்கிகள் செயல்படும் நிலையில், நாளை முதல் 4 மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், உடல்நிலை பாதிக்கப்பட்ட வங்கி ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள், பார்வை மாற்றுத்திறனாளி ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற மாநில வங்கியாளர்கள் குழுமம் அறிவுறுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025