#BREAKING : நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க முடியாது.
தமிழகத்தில் நீட் தேர்வால் ஏழை மற்றும் கிராம புற மாணவர்கள் பாதிக்கப்படுவதையடுத்து, நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், 9 பேர் அடங்கிய குழுவை ஜூன் 10-ம் தேதி அமைத்து, தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இதனையடுத்து, இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி கரு.நாகராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் முக்கிய கோரிக்கையாக, மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில், மாநில அரசு, இந்த விவகாரத்தை அரசியலாக்கும் வகையில் குழு அமைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி, சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் நீட் தேர்வு விவகாரத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க முடியாது என தெரிவித்த நிலையில், அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, தேர்தல் அறிக்கையில் அறிவித்ததன் அடிப்படையில் கொள்கை முடிவாக குழு அமைக்கப்பட்டுள்ளது. என தெரிவித்துள்ளார். இதனையடுத்து, கரு.நாகராஜன் தாக்கல் செய்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கை வரும் திங்கள்கிழமைக்கு தள்ளிவைத்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025