கோவில் நகைகளை உருக்குவது தொடர்பாக 6 வாரங்களுக்கு எந்த முடிவும் எடுக்க கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு.
தமிழக கோவில்களில் உள்ள நகைகளை உருக்குவது தொடர்பாக 6 வாரங்களுக்கு எந்த முடிவும் எடுக்க கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். கோவில் தங்கத்தை உருக்கி கட்டிகளாக மாற்றி வைப்பீடு வைப்பது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அறக்கட்டளை ஒன்று வழக்கு தொடுத்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 6 வாரங்களுக்கு தமிழக கோவில்களில் உள்ள நகைகளை உருக்குவது தொடர்பாக எந்தவொரு முடிவையும் எடுக்க கூடாது என்று ஆணையிட்டுள்ளனர்.
அதேசமயம் கோவில் நகைகளை கணக்கெடுப்பு பணி தொடரலாம் என்றும் தெரிவித்துள்ளனர். கோவில் நகைகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், உருக்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்றும் அறங்காவலர்கள் உள்ள கோவில்களில் நகைகளை உருக்குவதற்கு எவ்வித தடையும் இல்லை எனவும் தமிழக அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் அறங்காவலர்களை நியமிப்பது தொடர்பான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…