5 ஷவர்மா கடைகளில் கெட்டுப்போன சிக்கன் பறிமுதல்…! உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்..!

மதுரையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்களில் சோதனை மேற்கொண்ட நிலையில், 5 ஷவர்மா கடைகளில் கெட்டுப்போன சிக்கன் பறிமுதல்.
கேரளாவின் காசர்கோட்டில் உள்ள பேருந்து நிலையம் அருகே தனியார் உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட ஷவர்மாவை வாங்கி சாப்பிட்ட, கரிவள்ளூரில் வசிக்கும் தேவானந்தா என்ற 16 வயது பள்ளி மாணவி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மதுரையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், 5 ஷவர்மா கடைகளில் கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த 5 கடைகளுக்கும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நோட்டிஸ் அனுப்பியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025