#BREAKING: ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க பல்கலைக்கழகம் – முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு!!

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு.
இன்று விப்ரோ நிறுவன தலைவர் அசிம் பிரேம்ஜியுடன், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்களை முதல்வர் பேசியுள்ளார்.
அப்போது, கர்நாடகாவில் உள்ள விப்ரோவின், அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் ஆசியர்களுக்கு பயிற்சி வழங்குவது போன்று, தமிழகத்திலும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
மகளிர் உரிமைத்தொகை பெற நாளை முதல் விண்ணப்பம்!
July 6, 2025