நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்றுவரை 28 நாட்கள் தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 28வது நாளாக தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். கடந்த மார்ச் 7ம் தேதி 234 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்தபின் பரப்புரையை தொடங்கிய சீமான், அவர் போட்டியிடும் சொந்த தொகுதியான திருவொற்றியூர் தொகுதியில் இதுவரை 8 முறை பரப்புரையாற்றியுள்ளார்.
மீதமுள்ள நாட்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சீமான், இல்லாத நாட்களில் அக்கட்சி நிர்வாகிகள் குழுக்களாக பிரிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்றுடன் நிறைவடையும் பரப்புரையையொட்டி, தேர்தலுக்கு முந்தைய கடைசி இரன்டு நாட்களாக அவரது சொந்த தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
திருவொற்றியூர் தொகுதியில் வீதி வீதியாக சென்றும், இளைஞர்களுடன் கைப்பந்து விளையாடியும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக இன்றைய தினம் மணலியில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்த தொகுதியில் ஏற்கனவே, நாம் தமிழர் கட்சி சார்பில் கொரோனா காலத்தில் செய்யப்பட்ட நலத்திட்ட பணிகள், தற்போது அதானி குழுமத்தினால் அமைக்கப்படும் துறைமுகத்தை எதிர்த்து போராடி வருவதால் சீமானுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு காணப்படுகிறது.
மக்கள் கொடுத்த நம்பிக்கையின் அடிப்படையில், தனக்கு வெற்றி நிச்சயம் என்ற நிலையில், தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். மேலும் இந்த தொகுதியில் கலை கல்லூரி, 24 மணிநேரம் இயங்கக்கூடிய அரசு மருத்துவமனை அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்து, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இன்று மாலை 4 மணிக்கு சாத்தான்கரை என்ற பகுதில் பொதுக்கூட்டம் நடத்தி, தேர்தல் பரப்புரையை நிறைவு செய்ய இருக்கிறார் என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…