வருகின்ற 10-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடம் வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகிறது என ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை தொடர்ந்து, அனைத்து கட்சிகளுடன் தீவிர பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், திமுக ஒருபுறம் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மறுபுறம் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணலை நடத்தி வருகிறது.
திமுக சார்பில் விருப்பமனு அளித்தவர்களிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் 4 -வது நாளாக அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் செய்து வருகின்றனர். நேற்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 9 மணிக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் என தெரிவித்தார்.
அதன்படி, காணொலி வாயிலாக மாவட்ட செயலாளர்களுடன் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, அந்த கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் வருகின்ற 10-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடம் வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகிறது என அறிவித்தார்.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…