தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு – அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மனு தள்ளுபடி!

பணப்பட்டுவாடா செய்து ஊழல் நடைமுறைகளில் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.
தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. அதாவது தேர்தலில் பணப்பட்டுவாடா செய்து ஊழல் நடைமுறைகளில் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக வழக்கு தொடுக்கப்பட்டது.
திமுக வேட்பாளர் எம்.பழனியப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி விஜயபாஸ்கர் மனு அளித்திருந்தார். வழக்கை ஆரம்ப கட்டத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், 2021 தேர்தலில் தனது வெற்றிக்கு எதிரான வழக்கை நிராகரிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, தேர்தல் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முகாந்திரம் இருப்பதாகவும், எனவே, தேர்தல் வழக்கு விசாரணை தொடரும் எனவும் கூறி நீதிபதி சிவி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025