முந்திரி கடத்தல் – மேலும் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

முந்திரி கடத்தல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மகனை தொடர்ந்து மேலும் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது.
தூத்துக்குடியிலிருந்து லாரியில் முந்திரியை கடத்தியதாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் ஞானராஜ் ஜெபசிங் உட்பட 7 பேரை கடந்த நவம்பர் 27-ஆம் போலீசார் கைது செய்தனர். முந்திரி கடத்தல் வழக்கில் ஜெபசிங், விஷ்ணுகுமார், மனோகரன்,மாரிமுத்து, ராஜகுமாரன், செந்தில்குமார் மற்றும் பாண்டி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து, முந்திரி பருப்பு லாரியை கடத்திய வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் ஞானராஜ் ஜெபசிங்கை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் நேற்று உத்தரவிட்டார். இந்த நிலையில், லாரியுடன் ரூ.1.10 கோடி மதிப்புள்ள முந்திரி கடத்தப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
வழக்கில் கைதான மாரிமுத்து, செந்தில் முருகன், ராஜகுமாரன், விஷ்ணுபெருமாள் ஆகியோர் மெது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் ஞானராஜ் ஜெபசிங்கை தொடர்ந்து மேலும் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
கூட்டணி குறித்த கேள்வி! விஜய பிரபாகரன் சொன்ன பதில்!
July 28, 2025
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 28, 2025