பச்சை மண்டலமாக மாறிய கோவை – அமைச்சர் அறிவிப்பு.!

கோவை மாவட்டம் பச்சை மண்டலமாக மாறியுள்ளது என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9674 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 447 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கோவை மாவட்டத்தில் மொத்தம் 146 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில், ஒருவர் உயிரிழந்ததார். மீதம் இருந்த 145 பேர் முழுமையாக குணமாகி வீடு திரும்பினர்.
இதனால் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக கோவை மாறியது. இதைத்தொடர்ந்து, கடந்த 11 நாட்களாக கோவை மாவட்டத்தில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. இந்நிலையில், அமைச்சர் வேலுமணி கூறுகையில், கோவையில் கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்று இல்லாததால் அம்மாவட்டம் பச்சை மண்டலமாக மாறியுள்ளது என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025