தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!!

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மற்றும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதியில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்கள் வெளியாகியுள்ளது.