ஜில்..ஜில்..கூல்..கூல்..அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!!

அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், தற்போது ஏற்கனவே, சென்னை மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி. நகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, ராமநாதபுரம், தூத்துக்குடி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.