கோடை வெயிலின் உச்சம்..வருகிறது ‘அக்னி நட்சத்திரம்’..மக்களுக்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம்.!!

Agni Nakshatram

அக்னி நட்சத்திரம் மே 4 முதல் 28 வரை நீடிக்க உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

கோடை வெயிலின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், தற்போது  விரைவில் உச்சம் அடையும், அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அக்னி வெயில் துவங்குவதற்கு முன்பே பல மாவட்டங்களில் வெயில் 100-டிகிரிக்கு மேல் பதிவாகியுள்ளதால், வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்பதால் அஞ்சப்படுகிறது.

கோடை வெயிலின் உச்சமாகக் கருதப்படும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் வரும் மே 4 ம் தேதி முதல் தொடங்கி 28-ம் தேதி வரை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே, மக்கள் யாரும் மதிய நேரம் வெளியே செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அதிகபட்சமாக கடந்த 2018 ஆம் ஆண்டு அக்னி நட்சத்திரம் போது  திருத்தணியில் 113.9 டிகிரி வெயில் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்