#BREAKING: சன்னரக நெல் ஒரு குவிண்டால் ரூ.2060 கொள்முதல் -அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்..!

நெல் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் முதன்முறையாக தனி வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். அதில், பாரம்பரிய நெல் பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.25 லட்சம் ஒதுக்கீடு.
இந்த திட்டம் 52 கோடியே 2 லட்சம் செலவில் ஒன்றிய மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்புகளை குறைக்க விவசாயிகளுக்கு தார்பாய்கள் வழங்கப்படும். நெல் ஜெயராமன் சேகரித்த மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்தப்படும். நெல் ஜெயராமன் அவர்களின் மரபுசார் நெல் இரகங்கள் பாதுகாப்பு இயக்கம் ரூ.25 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் வகைகள் 200 ஏக்கர் பரப்பளவில் உற்பத்தி செய்து வழங்கப்படும். படித்த இளைஞர்கள் சொந்த ஊரிலேயே வேளாண்மையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ஊரக இளைஞர் திறன் மேம்பாட்டு இயக்கம் என்ற திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு ரூ.2.68 கோடி ஒதுக்கீடு.
தமிழக அரசு சார்பில் அளிக்கப்படும் ஊக்கத்தொகை ஒரு குவிண்டால் சன்ன ரகத்திற்கு ரூ.70-லிருந்து 100 ஆக உயர்வு. சாதாரண ரக நெல்லுக்கு அளிக்கப்படும் ஊக்கத் தொகை ரூ.50-லிருந்து ரூ.75 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சன்னரகத்திற்கு மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.1960 உடன் ரூபாய் 100 ஊக்கத்தொகை சேர்த்து ஒரு குவிண்டால் ரூ.2060 கொள்முதல் செய்யப்படும். சாதாரண ரக நெல்லுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள ரூ. 1940 உடன் சேர்த்து ரூ.75 சேர்த்து ஒரு குவிண்டால் ரூ.2015 கொள்முதல் செய்யப்படும் என தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025