சென்னை : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம் மீது பாட்டில் வீச்சு.!

CPI Chennai Office

சென்னை தி-நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் நேற்று இரவு 9 மணி அளவில் மர்ம நபர்கள் பாட்டில் , கற்கள் போன்ற பொருட்களை வீசியுள்ளனர். அந்த சமயம் கட்சி அலுவலகத்திற்குள் யாரும் இல்லாத காரணத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

மாநில தலைமை அலுவலகம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் குறித்து கட்சி நிர்வாகிகள் மாம்பழம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்ம நபர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தமிழக பாஜகவினர் தொடர் கைது.? ஆளுநரிடம் புகார் அளிக்க உயர்மட்ட சிறப்பு குழு திட்டம்.!

இந்த சம்பவம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி செய்தியாளர்களிடம் கூறுகையில், சம்பவம் நடந்த சமயத்தில் யாரும் இல்லாத காரணத்தால் எந்த பாதிப்பும் இல்லை. காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 24 மணிநேரமும் காவல்துறை பாதுகாப்பு அளித்து, இங்கே இருக்கும் தோழர்களின் (கம்யூனிஸ்ட் கட்சியினர்) பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

முன்னதாக கடந்த புதன் கிழமை, ஆளுநர் மாளிகை வாசல் அருகே உள்ள பேரிகார்ட் (தடுப்பு) மீது பெட்ரோல் பாட்டில் வீசிய கருக்கா வினோத் என்பவரை காவல்துறையினர் கைது செய்து  15 நாள் விசாரணை காவலில் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்