சென்னை புத்தக கண்காட்சி – நாளை முதல் ஆன்லைன் மூலம் டிக்கெட் பெறலாம்..!

Default Image

சென்னை புத்தக கண்காட்சி டிக்கெட்டை பபாசி இணையதளத்தில் நாளை முதல் பெறலாம்.

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிப்ரவரி 16 முதல் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த புத்தக கண்காட்சி அனுமதி கட்டணமாக ரூ.10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 500 பதிப்பாளர்கள் உடன் 800 அரங்கங்களில் நடக்கும் புத்தக கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார்.

பபாசி செயலாளர் முருகன் கூறுகையில், பள்ளி கல்லூரி மாணவர்கள் பயனடையும் வண்ணம் 10 லட்சம் இலவச அனுமதி சீட்டுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.  காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்றும், சென்னை புத்தக கண்காட்சி டிக்கெட்டை பபாசி இணையதளத்தில் நாளை முதல் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்