சென்னை செங்குன்றத்தை அடுத்துள்ள முண்டியம்மன்நகரில் வசித்து வருபவர் மணிகண்டன். இவரது மகன் நித்தீஷ் (12 வயது) தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கிறான்.இந்நிலையில் நேற்று இரவு நித்தீஷ் வீட்டு அருகில் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தான்.அப்போது வீட்டின் முன் பகுதியில் இருந்த சுற்றுச்சுவருக்கும், அதனை ஒட்டி இருந்த ஒரு தூணுக்கும் நடுவில் இருந்த இடைவெளியில் நுழைய முயன்றுள்ளான்.இந்நிலையில் அந்த இரண்டு சுவருக்கும் நடுவில் சிறிய அளவுதான் இடைவெளி இருந்தது. அந்த இடைவெளியில் புகுந்து வெளியே வர நுழைந்தான். ஆனால் அவனால் வெளியே வரமுடியவில்லை சுவருக்கு நடுவில் சிக்கி கொண்டான்.
இதனால் பயந்து அலறினான். அவனது சத்தத்தை கேட்டு வீட்டினர் அனைவரும் ஓடிவந்தனர். அவர்கள் எவ்வளவோ முயன்றும் நித்திஷை மீட்க போராடி தோற்றனர். எனவே, செங்குன்றம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் சொன்னார்கள். விரைந்து வந்த வீரர்கள் தூணின் முன்பகுதியை சுத்தியால் லேசாக உடைத்தனர், மேலும் நித்திஷின் ஆடைகளை கத்தரிகோலால் கிழித்து அகற்றினர். பின் அதாவது , 2 மணி நேர கடுமையான போராட்டத்திற்க்கு மத்தியில் அவனை பத்திரமாக மீட்டனர். 2 மணி நேரத்தில் சாதுர்யமாக சிறுவனை மீட்ட தீயணைப்பு வீரர்களை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…